தலை குகரம் (Sinus Cavity) என்பவை மண்டை ஓட்டினுள்ளே அமையப்பெற்ற, காற்றினால் நிரப்பபெற்ற குகைப் போன்ற ஒரு அறை.
அவ்வாறான அமைப்புகள் பின் வரும் நான்கு பகுதிகளின் பின்னே ஒளிந்துக்கிடக்கும்- அவையானவை
(அ) நெற்றி(Frontal Sinus– நெற்றிக்குகரம் );
(ஆ) நாசிகை (Nasal Sinus – நாசிக்குகரம்);
(இ) கன்னங்கள் (Maxillary Sinus -கன்னக்குகரம் );
(ஈ) கண்கள் (Sphenoidal Sinus – ஆப்பு குகரம்; Sphenoidal = wedge shaped = ஆப்பு (படம் காண்) = முக்கோண வடிவிலான கருவி
மேற்க்கூரிய 4 அமைப்புகளின் அகத்தே உட்புற சவ்வு chavvu – (Mucous membrane – மூடுதோல்) ஒட்டிக்கொண்டிருக்கும். இத்திசையின் பரப்பிலிருந்து தான் சளிப்போன்ற நீர் (Mucous secretion) சுரக்கும்.
ஆரோக்கியமான குகரத்தினூடே எவ்விதமான பாக்ட்டீரியாப் போன்ற நுண் கிருமிகளும் இராது.
சாதாரணமான சந்தர்ப்பங்களில், சவ்வுப்பகுதியில் சுரக்கும் சளிநீரானது குகரத்தினுள்ளிருந்து மூக்கின் வழியாக வெளியேறி, அக்குகரத்தினுள்ளே காற்று சஞ்சரிக்க ஏதுவாக இருக்கும்.
ஆயின், அக்குகரத்தின் வெளியேற்றுப்பாதையில் ஏதேனும் அடைப்பு இருக்கப்பெறின்,அதனுள் சுரந்த சளிநீரானது, வெளியேற வழியில்லாது, அவ்விடமே தேங்கித் தேங்கி, நிரம்புகின்றது. ஈங்ஙனம் நிரம்பப்பெற்ற சளி நீரில் பாக்ட்டீரியாப் போன்ற நுண் கிருமிகள், வெகு வேகமாக வளர்ந்து இனப்பெருக்கம் கண்டு, குகரத்தின் சவ்வுதனில் அழற்சி -யினை(infection & inflammation) உண்டாக்குகின்றது. இப்படியாக தலையில் நீர்க்கோவை தோன்றுகிறது.
நீர்க்கோவையின் முன் வினைக் காரணிகள் (Predisposing factors of Sinusitis) :
பின்வரும் காரணிகளைப் புறக்கணிக்கையில் நீர்க்கோவை தோன்றலாம்:
(அ) குகரத்தின் மேற்பரப்பில் உள்ள அணு கடத்தி kadaththi (cilia) தனது இயல்பான வேலையான சளிநீரை வெளியேற்றும் பணியினை தக்கவாறு செய்யாமல் முடங்குவது(சில நோய்களில் இது சாத்தியம்).
(ஆ) மூக்கொழுகுதல் மற்றும் அழற்ச்சியின் காரணமாக அடைப்பு ஏற்படலாம்.
(இ வளைந்த மூக்கெலும்பு (deviated nasal septum); மூக்கெலும்பு வளர்ச்சி (nasal bone spur); மூக்கில் சதை வளர்ச்சி (nasal polyps) உண்டான காரணிகளினாலும் குகரத்தில் அடைப்பு ஏற்படலாம்.
(ஈ )தீவிர மூக்கழற்ச்சி – Acute Rhinitis
(உ) நீர் ஈரித்தல் Cystic Fibrosis
(ஊ) கார்டாஜெநர் நோய்க் கலவை – Kartagener syndrome
(எ) ஆழ் கடல் நீச்சல் – scuba diving
(ஏ) ஆகாசகமனம் – Flying
(ஒ)பின்மூக்கு தசைவளர்ச்சி – Adenoid
(ஓ) புகைத்தல் – Smoking
(ஔ) மேற் தாடை பல் அழற்ச்சி – Maxillar Tooth infection
(ஃ) அபல நோயெதிர்ப்பு தொகுப்பு – Weakened immune system
நீர்க்கோவையின் பாதிப்பினை மூவகையாக பிரிக்கலாம் :-
தீவிர நீர்க்கோவை – Acute Sinusitis
மிதமான நீர்க்கோவை – Sub acute Sinusitis
நாட்பட்ட நீர்க்கோவை- Chronic Sinusitis.
நீர்க்கோவையின் அறிகுறிகள் (Symptoms of Sinusitis) :-
ஆயுர்வேதத்தில் நீர்க்கோவை :-
ஆயுர்வேதத்தில் நீர்க்கோவையினை ப்ரதிஷ்யாயம் என்பர்.
என ப்ரதிஷ்யாயங்கள் வகை படுத்தப்பட்டுள்ளன
சிகிச்சையில் கவனம் கொள்ள வேண்டிய சித்தாந்தங்கள்: ஆயுர்வேதத்தில் பலதரப்பட்ட மருத்துவ கூட்டுக்கள் (அ) யோகங்கள் கூறப்பட்டு இருந்தாலும், அவற்றிலிருந்து தேவைக்கு தக்க, தோஷங்களின் அடிப்படைச் சார்ந்து, மருந்து கலவைகளை உபயோகிப்பின், கிடைக்கப் பெறும், தீர்வானது விரைந்து கிட்டக்கூடியதாகவும், நிரந்தரமானதாகவும் அமைவதில் சந்தேகமில்லை.
உபயோகத்தில் இருக்கும் சில மருந்து கலவைகள் :-
பத்தியா ஷடங்கம்
பத்திய அக்ஷ தாத்ரி ஆதி
தாளீச ஆதி
கற்பூர ஆதி
பிரவாளம்
தசமூல ஹரீதகீ
தசமூல அரிஷ்ட
தஷமூல கஷாயம்
கருத்த குளிகை
அக்னி குமார ரஸம்
ம்ருத்யுஞ்சய ரஸம்
அம்ருதோத்தரம் கஷாயம்
ஸ்ருங்க்யாதி சூரணம்
ராஸ்னாதி சூரணம்
கசோராதி சூரணம்
மர்ம குளிகை மற்றும் இன்னும் பல.
மேற்க்கூறப்பட்ட மருந்துகளில் எவை எவை வாத, பித்த, கப, சன்னிபாத தோஷங்களை தணிக்கும் தன்மை உடையவை, பாதிக்கப்பட்ட நபரில் எந்த தோஷங்கள் வெகுண்டு எழுந்து பிரச்சினையை உண்டு பண்ணுகின்றது என்பதை, ஆய்வு செய்த, தரப்படுகையில் குணம் என்பது வெகு தொலைவில் இல்லை
For e-mail Consultation : Click here
For Payment Options : Click here
For appointment to consult in person : Click here
Sarve Santu nirāmayā: ||